Paristamil Navigation Paristamil advert login

தமிழர் பகுதியில் உள்ள உணவகத்தில் பாரிய தீ! - மூவர் கவலைக்கிடம்!!

தமிழர் பகுதியில் உள்ள உணவகத்தில் பாரிய தீ! - மூவர் கவலைக்கிடம்!!

31 தை 2026 சனி 16:09 | பார்வைகள் : 2093


தமிழர்கள் சென்றிந்துவாழும் பகுதி ஒன்றில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பாரிய தீ ஏற்பட்டு, மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் உள்ள Rue Paul-Lafargue வீதியில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு கட்டிடத்திலேயே திடீரென தீ பரவியது. கட்டிடத்தின் கீழ் தள்ளத்தில் அமைந்துள்ள உணவகத்தின் பின்பக்க அறையில் இன்று சனிக்கிழமை காலை 6 மணிக்கு தீ பற்றியது. பின்னர் வேகமாக தீ பரவ ஆரம்பித்தது.

தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது.  ஆறு பேர் தீக்குள் இருந்து மீட்கப்பட்டனர். அவர்களில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

200 சதுரமீற்றர் அளவு பகுதி தீயில் சேதமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்