Paristamil Navigation Paristamil advert login

துரதிர்ஷ்டவசமாக இலங்கை செல்லவில்லை- சிறந்த அணி வெல்லட்டும் - ஏஞ்சலோ மேத்யூஸ்

 துரதிர்ஷ்டவசமாக இலங்கை செல்லவில்லை- சிறந்த அணி வெல்லட்டும் - ஏஞ்சலோ மேத்யூஸ்

3 பங்குனி 2026 செவ்வாய் 05:19 | பார்வைகள் : 1061


இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஐசிசிக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2026 டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி வெற்றி பெறாமல் வெளியேறியது.

அவர் ஐசிசிக்கு வாழ்த்து தெரிவித்தும், இலங்கை அணி வெளியேறியது குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அவரது எக்ஸ் தள பதிவில், "ஐசிசிக்கு மிகவும் நன்றி; மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! துரதிர்ஷ்டவசமாக இலங்கை அணி 2வது சுற்றில் எந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை!

நாம் அனைவரும் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதுவல்ல. அரையிறுதிப் போட்டியாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள், சிறந்த அணி வெற்றி பெறட்டும்" என கூறியுள்ளார்.   

எழுத்துரு விளம்பரங்கள்