அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது ?
2 பங்குனி 2026 திங்கள் 14:27 | பார்வைகள் : 1899
கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். துபாய், மலேசியா, ஸ்பெயின், பெல்ஜியத்தில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கார் ரேஸ் பின்னணியில், அஜித்தை வைத்து ஒரு ஆவண படத்தை இயக்குனர் விஜய் எடுப்பதாக கூறப்பட்டது. இப்போது அவரே அது ஆவணப்படமல்ல, வழக்கமான சினிமா என்று கூறியுள்ளார். அந்த படத்துக்கு தான் இசையமைப்பதாக ஜி.வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கார் ரேஸ் நடக்கும் இடத்துக்கு சிவகார்த்திகேயன், மாதவன், சிம்பு, சிபிராஜ், நயன்தாரா, அனிருத் உட்பட பலரும் சென்று வந்தனர். அஜித்தை உற்சாகப்படுத்தும் வகையில் அவர் அணி உடையை அணிந்தனர். இப்போது அந்த படத்தில் இவர்களும் நடித்து இருக்கிறார்களோ என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்கள் கார் ரேஸ் குறித்து, அஜித் குறித்து அந்த படத்தில் பேசியிருக்க வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
வழக்கமான படமாக அல்லாமல் ஒரு மாறுபட்ட திரைக்கதையில் அந்த படம் உருவாக வாய்ப்புள்ளது. சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குனர்களும் அந்த படத்தில் பங்கேற்றதாக தகவல் என்று கோலிவுட்டில் கிசுகிசுப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும்போது அந்த கார் ரேஸ் படத்தில் நடித்தவர்கள், பணியாற்றியவர்கள் விவரம் தெரிய வரும். கார் ரேஸ் விஷயத்தை ஒரு கமர்ஷியல் படமாக்கிய அஜித்தின் பிஸினஸ் தந்திரத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan