Paristamil Navigation Paristamil advert login

துபாயில் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்

துபாயில் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்

1 பங்குனி 2026 ஞாயிறு 10:45 | பார்வைகள் : 2176


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து பாரிய இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இதன் ஒரு தாக்குதலாக, டுபாயின் புகழ்பெற்ற 'பாம் ஜுமேரா' (Palm Jumeirah) பகுதியில் உள்ள 'ஃபேர்மாண்ட் தி பாம்' (Fairmont The Palm) எனும் ஐந்து நட்சத்திர விருந்தகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக டுபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பஹ்ரைன் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு (Fifth Fleet) தலைமையகத்திற்கு அருகிலும் பாரிய வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.