Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி

 இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி

1 பங்குனி 2026 ஞாயிறு 07:49 | பார்வைகள் : 168


டி20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.

பல்லேகேலேவில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ஓட்டங்கள் குவித்தது.

சாஹிப்ஸாதா ஃபர்ஹான் 100 ஓட்டங்களும், ஃபஹர் ஜமான் 84 ஓட்டங்களும் விளாசினர். மதுஷங்கா 3 விக்கெட்டுகளும், ஷானகா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

கடைசிவரை போராடிய அணித்தலைவர் தசுன் ஷானகா 31 பந்துகளில் 8 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார். பவன் ரத்னயாகே 37 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை அணியை 147 ஓட்டங்களுக்குள் ஆல்அவுட் செய்தால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், பாகிஸ்தான் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றதால் தொடரை விட்டு வெளியேறியது.  

🔥 இன்றைய சிறப்பு சலுகை