மத்திய கிழக்கில் பதற்றம் - அமைதிக்கான நடவடிக்கைகள் கோரும் இலங்கை அரசு
28 மாசி 2026 சனி 17:38 | பார்வைகள் : 2034
மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மோதல் நிலைமை குறித்து இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அப்பகுதியில் உருவாகி வரும் சூழ்நிலை பிராந்திய மற்றும் உலக நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது.
மேலும், சூழ்நிலையை மேலும் மோசமடையச் செய்யக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire