‛ரணபலி' படத்தின் முதல் பாடல் வெளியானது
28 மாசி 2026 சனி 15:55 | பார்வைகள் : 2176
இயக்குநர் ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ரணபலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தின் தலைப்பு அறிமுக காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் தேவரகொண்டாவும், முன்னணி நடிகையாகத் திகழும் ராஷ்மிகா மந்தனாவும் ஏற்கனவே ‘கீதம் கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நீண்ட காலமாக காதலித்து வந்த இந்த ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் தற்போது மூன்றாவது முறையாக ‘ரணபலி’ திரைப்படத்தின் மூலம் இருவரும் திரையில் இணைகின்றனர்.
இந்த திரைப்படத்தில் ‘மம்மி’ படத்தில் நடித்த நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ‘ரணபலி’ திரைப்படத்தின் “ஏதய்யா சாமி” என்ற பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Annonces
Ajouter
Annuaire