மட்டன் உப்பு கறி..
28 மாசி 2026 சனி 15:42 | பார்வைகள் : 204
இன்று என்ன சமையல்ன்னு யோசிச்சு டைம் வீணாக்குறதுக்கு பதிலா, சுலபமா, டேஸ்டா, டக்குனு செஞ்சிடக் கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மட்டன் உப்பு கறி. மசாலா அதிகம் வேண்டாம், ஆனா சுவை மட்டும் மொத்த குடும்பத்தையும் மறுபடியும் கேட்க வைக்கும்.
இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால், அரை கிலோமட்டன், 30சின்ன வெங்காயம், 20வர மிளகாய், 20பூண்டு பல், மஞ்சள் தூள், உப்பு, அரை தக்காளி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை நறுக்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வரமிளகாய் போட வேண்டும். அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளற வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு மெலிதாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக மசியும் போது, அதில் மட்டனை சேர்த்து அனைத்தும் ஒன்றாக கலந்து விட வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பாத்திரத்தை மூடி வைத்து மட்டன் நன்றாக வெந்துவர கிளறிக் கொண்டே சமைக்க வேண்டும். இறுதியில் தண்ணீர் குறைந்து மட்டன் சுருண்டு நன்கு வறண்டு வரும் வரை கிண்டி எடுத்தால், சுவையான மட்டன் உப்பு கறி தயார்.சூடா சாதம் இருந்தா போதும்… இந்த மட்டன் உப்பு கறி இருந்தா ஒரு பிளேட் சாதம் கூட போதாது..இன்னொரு தடவை கேட்க வைக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan