Nano Banana 2 AI கருவியை அறிமுகப்படுத்திய Google
28 மாசி 2026 சனி 13:23 | பார்வைகள் : 1697
கூகுள் நிறுவனம், தனது வைரலான AI பட உருவாக்கும் கருவியான Nano Banana மாடலின் அடுத்த பதிப்பான Nano Banana 2-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட Nano Banana, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வெறும் நான்கு நாட்களில் 1.3 கோடி புதிய பயனர்கள் Gemini செயலியை பதிவிறக்கம் செய்தனர்.
அக்டோபர் மாதத்திற்குள் 5 பில்லியன் படங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் Nano Banana Pro வெளியிடப்பட்டது.
இப்போது அறிமுகமான Nano Banana 2, கூகுளின் Gemini Flash மாடலை அடிப்படையாகக் கொண்டது. இது வேகமாகவும் குறைந்த செலவில் படங்களை உருவாக்கும் திறன் கொண்டது.
மேலும், பயனர்களின் வழிமுறைகளை (Prompt) துல்லியமாக பின்பற்றி, கூர்மையான விவரங்களுடன் படங்களை உருவாக்கும் திறன் பெற்றுள்ளது.
இந்த புதிய மாடல், Gemini App, AI Mode, Lens on Search, Flow போன்ற கூகுள் தயாரிப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படங்களுடன் சேர்த்து வீடியோ உருவாக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
கூகுள், OpenAI-யின் ChatGPT-க்கு போட்டியாக AI துறையில் முன்னிலை வகிக்க முயற்சி செய்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் கூகுள் பங்குகள் 47 சதவீதம் உயர்ந்துள்ளன. Gemini 3 Model வெளியீட்டின் வெற்றியால், கூகுள் 750 மில்லியன் மாதாந்திர பயனர்களை ஈர்த்துள்ளது.
Nano Banana 2, கூகுளின் AI பயணத்தில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan