Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் முக்கிய தளபதி உயிரிழப்பு

 இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தின் முக்கிய  தளபதி உயிரிழப்பு

28 மாசி 2026 சனி 11:12 | பார்வைகள் : 331


ஈரான் மீது இஸ்ரேல் ஆரம்பிக்கப்பட்ட  இராணுவ நடவடிக்கையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.


இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதல்களில், ஈரான் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அமீர் ஹடாமி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த செய்தி தொடர்பில் ஈரானிய தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலும் வழங்கப்படவில்லை.

28.02.2026  ஈரான் மீது தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்கள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நகரம் முழுவதும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், நாட்டின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், “ஈரான் ஆட்சி ஏற்படுத்தும் உடனடி அச்சுறுத்தல்களை நீக்கி, அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் குறிக்கோள்,” என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதன்போது, மேற்படி தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை தொழில் மற்றும் கடற்படை திறன்களை தகர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த ஈரான் அதிகாரிகள், விரைவில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.