Paristamil Navigation Paristamil advert login

ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

28 மாசி 2026 சனி 08:36 | பார்வைகள் : 1899


ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் போர் ஏற்பட கூடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீதான கூட்டுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க அதிகாரி ஒருவர் அளித்த கருத்துக்களில் குறித்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பல்கலைக்கழக வீதிகள் மற்றும் ஜோம்ஹோரி பகுதியை பல ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய இராணுவம் அவசரகால நிலையை அறிவித்து, குடிமக்களை தங்குமிடங்களுக்கு அருகில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.