அழியும் நிலையில் அமேசான் பழகுடியினர்....
28 மாசி 2026 சனி 08:06 | பார்வைகள் : 333
அமேசான் காடுகளின் ஆழமான பகுதியில் வசிக்கும் மிகவும் அருகிவரும் பழங்குடியின சமூகத்தில், சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளமை அம்மகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பழங்குடியினரில், தற்போது மூன்று பெண்கள் மட்டுமே உயிருடன் எஞ்சியிருந்த நிலையில், ஆண் குழந்தையின் பிறப்பு அந்த இனம் முழுவதும் அழிந்துவிடும் என்ற அச்சத்தை போக்கியுள்ளது.
ஆண் குழந்தையின் வருகை சமூகத்தினரின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கான புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
அமேசான் காடுகளில் ,வாழும் பழங்குடியின சமூகம் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் அழியும் நிலையை எட்டியிருந்தது.
நோய்கள், காடழிப்பு மற்றும் பிற சமூகத்துடனான மோதல்கள் ஆகியவை அவர்களின் மக்கள் தொகையை வெகுவாகக் குறைத்தன.
எஞ்சியிருந்த மூன்று பெண்களும் மிகக் குறைந்த வயதிலேயே தங்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டனர்.
இந்த நிலையில், இந்த ஆண் குழந்தையின் பிறப்பு அவர்களின் சமூகத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண் குழந்தையின் பிறப்பு, பழங்குடியின சமூகத்திற்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த குழந்தை வளர்ந்து பெரியவனான பிறகு, பழங்குடியினத்தின் பாரம்பரியத்தை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த சமூகத்தினரின் மக்கள் தொகை மீண்டும் அதிகரிக்குமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து பழங்குடியின ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பழங்குடியின சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan