பங்களாதேச நாட்டில் 5.4 ரிக்டர் நிலநடுக்கம்
27 மாசி 2026 வெள்ளி 14:58 | பார்வைகள் : 816
பங்களாதேச நாட்டில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், கொல்கத்தா உள்ளிட்ட இந்தியப் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேச தலைநகர் டாக்காவிலிருந்து 188 கி.மீ. தொலைவில், வெள்ளிக்கிழமை 27.02.2026 மதியம் 1.30 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
வங்கதேசத்தின் நிலநடுக்கத்தால், மேற்கு பங்களாதேச மாநிலத்தின் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இதனால், கொல்கத்தாவில் அதிர்வுகளில் சிக்கிய பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவின் வடகிழக்கில் மேற்கு வங்கத்தின் அருகில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் இன்று மதியம் 12.02 மணியளவில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, வடகிழக்கு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்படுவதால் அங்கு வசிக்கும் மக்களிடையே மிகுந்த பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னதாக, பங்களாதேசத்தில் கடந்த நவ. 21 அன்று ஏற்பட்ட 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 9 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan