ஈரானுக்கான சேவைகளை நிறுத்தும் Qatar Airways
27 மாசி 2026 வெள்ளி 11:45 | பார்வைகள் : 291
கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) நிறுவனம் ஈரானுக்கான தனது சில விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தவகையில் இடை நிறுத்தும் காலத்தை ஜூன் 30 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை கட்டார் தலைநகருக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஒரு நாளைக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படும்.
இந்த நீட்டிக்கப்பட்ட காலப்பகுதியில் ஈரானுக்கான மற்ற அனைத்து கட்டார் ஏர்வேஸ் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிடிகொடுக்காத ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கும் என்ற சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில், “பயங்கரவாதத்தின் முதன்மை ஆதரவாளரான ஈரான் அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
அடுத்த பத்து முதல் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளார்
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்




Ajouter
Annuaire
Scan