புற்றுநோயிலிருந்து உடலை காக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?
26 மாசி 2026 வியாழன் 14:48 | பார்வைகள் : 154
மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படும் இளைஞர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புற்றுநோய் வராமல் ஒருவர் தன்னை முழுமையாக தற்காத்துக் கொள்ள முடியாது என்றாலும், புற்றுநோய் அபாயத்தை ஒருசில உணவுகள் மூலமாகவும், பழக்கங்கள் மூலமாகவும் பெரியளவில் குறைக்க முடியும்.
அந்தவகையில் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் ஐந்து உணவுகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன, அவை எப்படி புற்றுநோய் எதிர்ப்பை நம் உடலில் சாத்தியப்படுத்துகின்றன என்பது பற்றிய அடிப்படை தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஊட்டச்சத்து மிகுந்த கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளி கிழங்குகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதிலுள்ள நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் A, B6, C போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்றவையோடு பீட்டா கரோட்டின், குளோரோஜெனிக் அமிலம், அந்தோசயான்கள் மற்றும் கூமரின் போன்ற நன்மை தரக்கூடிய விஷயங்களும் காணப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த சர்க்கரைவள்ளி கிழங்கில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் அதிகம் உள்ளன. குறிப்பாக இதில் காணப்படும் கெரட்டினாய்டுகள் வயிறு, சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோய் குறைப்பதற்கு பெருமளவு உதவுகிறது. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளி கிழங்கில் ப்ளூபெர்ரியை விட மூன்று மடங்கு அதிக ஆன்டி-ஆக்சிடன்ட்கள் காணப்படுகிறது.
முளைகட்டிய ப்ரோகோலி: முதிர்ந்த ப்ரோகோலியை விட 10 முதல் 100 மடங்கு அதிக சத்துக்கள் கொண்டதுதான் முளைகட்டிய ப்ரோகோலி. இதில் சல்பரோபேன் என்ற வேதிப்பொருள் மிக அதிக அளவில் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, கட்டிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடை செய்ய உதவுகிறது. மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இது உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கிவி பழம்: இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பாலிஃபெனால்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் தொடக்க நிலையில் உடலில் திசுக்கள் சேதமாவது தடுக்கப்படுகிறது. மட்டுமன்றி கிவி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள், செல்களில் ஏற்படும் 'டிஎன்ஏ' பாதிப்புகளைச் சரிசெய்ய உதவுகின்றன. டிஎன்ஏ சிதைவுதான் புற்றுநோய் செல்கள் வளர முக்கியக் காரணம் என்பதால், புற்றுநோய் தடுப்பில் இது மிகவும் உதவியாக இருக்கும்.
க்ரீன் டீ: கிரீன் டீயில் எபிகல்லோகேடசின்-3-கேலேட் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி அதிகம். இதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட், புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுப்பதோடு, அவை மற்ற உறுப்புகளுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல் நச்சுக்களை அழித்து, ஆரோக்கியமான செல்களின் டி.என்.ஏ சிதைவடையாமல் பாதுகாக்கிறது.
பீன்ஸ்: புரத மூலமாகவும், அதிக நார்ச்சத்துகளின் இருப்பிடமாகவும் உள்ள பீன்ஸை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோயின் அபாயம் 28% வரை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அதிக நார்ச்சத்து உட்கொள்ளல் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதோடு இணைக்கப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக வழங்கப்பட்டவையே. உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும். News18Tamilnadu இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan