Paristamil Navigation Paristamil advert login

ராஷ்மிகா - விஜய் ஜோடியின் காதல் கதை!

 ராஷ்மிகா - விஜய் ஜோடியின் காதல் கதை!

26 மாசி 2026 வியாழன் 14:22 | பார்வைகள் : 1927


2017ல் கீதா கோவிந்தம் படத்தின் முகூர்த்தத்தின் போது இருவரும் சந்தித்தனர். அப்போது ராஷ்மிகாவுக்கு ரக்ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. விஜய் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வந்தார்.

படப்பிடிப்பில் இருவரும் ஒதுங்கியே இருந்தனர். ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்காக, இயக்குனர் பரசுராம் காதல் வசனங்களை ஒன்றாகப் பயிற்சி செய்ய வைத்தார். இதுவே இருவருக்கும் இடையே நெருக்கத்தை உருவாக்கியது.

திரையில் காதலர்களாக நடிக்க வேண்டியிருந்தாலும், நிஜத்திலும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கீதா கோவிந்தம் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

ஒன்பது வருட நட்பு, தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. திரையில் ரசித்த ஜோடியை நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இவர்களின் காதல் கதை இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்.