சீனாவில் குங்ஃபூ செய்து அசத்திய மனித உருவ ரோபோக்கள்
25 மாசி 2026 புதன் 07:36 | பார்வைகள் : 161
சீனாவில், மனித வடிவ ரோபோக்கள் பீஜிங்கின் புகழ்பெற்ற 'டெம்பிள் ஆப் ஹெவென்' கோவில் முன்பு நடத்திய கூட்டு குங்பூ நிகழ்ச்சி இணையத்தை கவர்ந்து வருகிறது.
நம் அண்டை நாடான சீனா, ரோபோட்டிக்ஸ் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அதை நிரூபிக்கும் வகையில், 'யுனிட்ரீ ரோபோட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மனித வடிவ ரோபோக்கள், ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியை நடத்தின.
சிவப்பு நிற டி- - ஷர்ட் அணிந்த, 50 ரோபோக்கள், ஒரே மாதிரியான குங்பூ அசைவுகளை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தன.
இது பாரம்பரிய சீன கலையான குங்பூவையும், நவீன ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த சீன புத்தாண்டு திருவிழாவிலும் இதே ரோபோக்கள் இளம் குங்பூ கலைஞர்களுடன் இணைந்து சவாலான அசைவுகளை துல்லியமாகவும், ஒருங்கிணைந்தும் நடத்தி ஆச்சரியப்படுத்தின.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan