Paristamil Navigation Paristamil advert login

Météo France வெளியிட்ட கவலையான செய்தி!!

Météo France வெளியிட்ட கவலையான செய்தி!!

24 மாசி 2026 செவ்வாய் 17:16 | பார்வைகள் : 536


வானிலை அவதானிப்பு மையம் கவலையான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

1959 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்சில் மிக மோசமான வானிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரான்சில் தொடர்ச்சியாக 40 நாட்கள் மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஜனவரி 14 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 22 ஆம் திகதி வரையான நாட்களில் பிரான்சின் ஏதோ ஒரு பகுதியில் மழை பெய்துகொண்டே இருந்துள்ளது.

"1959 ஆம் ஆண்டின் பின்னர் நீண்டநாட்கள் மழை பதிவாகியுள்ளது" என வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த வருடத்தில் (1959) 44 நாட்கள் தொடர் மழை கொட்டித்தீர்த்திருந்தது.

அதன்பின்னர், 2013 ஆம் ஆண்டில்  32 நாட்கள் மழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்