அந்தமானில் ஹெலிக்கொப்டர் கடலில் வீழ்ந்து விபத்து
24 மாசி 2026 செவ்வாய் 16:57 | பார்வைகள் : 971
அந்தமானில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிக்கொப்டர் கடலில் விழுந்ததில் அதிலிருந்த பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அந்தமானில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு செல்வதற்கு மத்திய பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸ் சார்பில் சுற்றுலா ஹெலிக்கொப்டர் இயக்கப்படுகின்றன.
24.02.2026 இன்று காலை 9:30 மணிக்கு ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து 7 பேருடன் புறப்பட்ட ஹெலிக்கொப்டர், மாயாபந்தர் அருகே கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது. ஹெலிக்கொப்டரிலிருந்த அனைவரும் நடுக்கடலில் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் கிடைத்த சில நிமிடங்களில் அங்கு சென்ற பொலிஸார் மற்றும் மீட்பு படையினர், உடனடியாக அனைவரையும் மீட்டனர்.
மீட்கப்பட்ட அனைவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan