மொஸ்கோவில் பொலிஸார் வாகனம் அருகே வெடிகுண்டு தாக்குதல்
24 மாசி 2026 செவ்வாய் 16:53 | பார்வைகள் : 960
ரஷ்யாவில் பொலிஸார் சோதனை வாகனம் அருகே வந்த மர்ம நபர், வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மொஸ்கோவில் கவியோ லோவ்ஸ்கி ரயில் நிலையத்தில் சோதனை வாகனம் ஒன்றில் போக்குவரத்து பொலிஸாரிடம் அணுகிய அடையாளம் தெரியாத நபரொருவர், பின்னர் தாம் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்த நபரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்தை அடுத்து ரஷ்ய புலனாய்வு குழு விசாரணையில் இறங்கியுள்ளது. தாக்குதல் நடத்தியவர் யார், அவர் பயங்கரவாதியா என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan