வவுனியாவில் மயானத்தில் இருந்து எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
24 மாசி 2026 செவ்வாய் 16:11 | பார்வைகள் : 1773
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிஸாருக்கு இன்று (24) காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுமார் 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆணின் உடலில் சிறுபகுதி தீயினால் எரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire