அவதானம்: குழந்தைகளுக்கான Doliprane குடிப்பான் பிழை காரணமாக திரும்பப் பெறப்படுகின்றன!!
24 மாசி 2026 செவ்வாய் 08:13 | பார்வைகள் : 3889
Agence nationale de sécurité du médicament et des produits de santé (ANSM) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Doliprane 2,4 % suspension buvable மருந்தின் 27 தொகுதிகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. போத்தல்களுடன் வழங்கப்படும் சில பிப்பெட்டுகளின் (pipettes) அளவீட்டு குறியீடுகள் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரில் கழுவியபின் மங்கிவிடக்கூடும் என்பதால், குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தளவில் பிழை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் மருந்தின் தரத்தில் எந்த குறையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 முதல் 26 கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கு பரசிட்டமோல் அதிக அளவில் வழங்கப்படுவதால் கல்லீரல் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக ANSM எச்சரித்துள்ளது. 2025 நவம்பர் 12 முதல் 2026 பிப்ரவரி 3 வரை மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட்ட இந்த தொகுதிகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மருந்தகத்திற்கு திருப்பி அளித்து இலவச மாற்றம் பெறலாம். குறைபாட்டின் மூல காரணம் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், விநியோக தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan