Paristamil Navigation Paristamil advert login

T20 WC 2026 - கிறிஸ் கேய்லின் 17 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வீரர்

 T20 WC 2026 - கிறிஸ் கேய்லின் 17 ஆண்டுகள்  சாதனையை முறியடித்த வீரர்

24 மாசி 2026 செவ்வாய் 06:14 | பார்வைகள் : 208


கிறிஸ் கேய்லின் 17 ஆண்டுகள் பழமையான T20 உலகக்கோப்பை சாதனையை ஷிம்ரான் ஹெட்மையர் முறியடித்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இடதுகை துடுப்பாட்ட வீரரான அவர் வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்த சாதனையால் ஹெட்மையர், மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக T20 உலகக்கோப்பையில் மிக வேகமான அரைசதம் அடித்த வீரராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். 44

இதற்கு முன் 2009-ல் லண்டன் ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிறிஸ் கேய்ல் 23 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். அந்த சாதனையை ஹெட்மையர் முறியடித்துள்ளார்.

மேலும், ஹெட்மையர் இந்த தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 22 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். ஆனால் வான்கடே மைதானத்தில் அவரது ஆட்டம், மேற்கு இந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட வலிமையை உலகிற்கு மீண்டும் நிரூபித்தது.

இருப்பினும், T20 உலகக்கோப்பை வரலாற்றில் மிக வேகமான அரைசதம் இந்தியாவின் யுவராஜ் சிங்கிற்கே சொந்தமானது. 2007-ல் இங்கிலாந்துக்கு எதிராக அவர் வெறும் 12 பந்துகளில் அரைசதம் அடித்து, ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார்.

ஹெட்மையரின் சாதனை, மேற்கு இந்திய தீவுகள் அணியின் தைரியமான துடுப்பாட்ட பாணியை உலகிற்கு மீண்டும் நினைவூட்டியது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்