பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! - மகனைக் கைது செய்ய உதவிய தந்தை!
23 மாசி 2026 திங்கள் 13:49 | பார்வைகள் : 3440
Les Lilas (Seine-Saint-Denis) நகரில் வசிக்கும் பெண் ஒருவர் அவரது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கணவரது தந்தை காவல்துறையினரையினரை அழைத்துள்ளார்.
நேற்று பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி அளவில் 38 வயதுடைய நபர் அவரது தந்தையை அழைத்து தமக்கு சிகரெட் ஒன்று தருமாறு கேட்டுள்ளார். அதன்போது அவர் மிகுந்த தடுமாற்றமாக இருந்ததாகவும், அவரது மனைவியை தாம் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை அடுத்து, தந்தை காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
வீட்டுக்கு விரைந்துவந்த காவல்துறையினர், வீட்டில் மகனின் மனைவி கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் அவர் இறந்துகிடந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. அத்தோடு அவரைக் கொலை செய்த கணவரும் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan