விருதுகளை அள்ளிய ‘அமரன்’ திரைப்படம்!
23 மாசி 2026 திங்கள் 13:42 | பார்வைகள் : 1726
இந்தியத் திரையுலகில் வழங்கப்படும் விருதுகளில் பாரம்பரியமும் பெருமையும் வாய்ந்த விருதுகளில் ஒன்றாக பிலிம்பேர் விருதுகள் கருதப்படுகின்றன. பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகளின் 70வது விழா நேற்று கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் நடைபெற்றது.
தென்னிந்திய மொழித் திரையுலகான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களுக்கான விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டன. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளில் ‘அமரன்’ திரைப்படம் அதிக விருதுகளை கைப்பற்றி கவனம் பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த பின்னணி பாடகி உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
சிறந்த திரைப்படம் – அமரன்
சிறந்த திரைப்படம் (விமர்சகர் விருது) – மெய்யழகன்
சிறந்த இயக்குநர் – பி. எஸ். வினோத் ராஜ் (கொட்டுக்காளி), ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த நடிகர் – சிவகார்த்திகேயன் (அமரன்)
சிறந்த நடிகர் (விமர்சகர் விருது) – அரவிந்த் சாமி (மெய்யழகன்)
சிறந்த நடிகை – சாய் பல்லவி (அமரன்)
சிறந்த நடிகை (விமர்சகர் விருது) – அன்னா பென் (கொட்டுக்காளி)
சிறந்த துணை நடிகர் – கார்த்தி (மெய்யழகன்)
சிறந்த துணை நடிகை – பார்வதி திருவோத்து (தங்கலான்), ஸ்வாசிகா (லப்பர் பந்து)
சிறந்த இசையமைப்பாளர் – ஜி. வி. பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த பாடல் – உமாதேவி (யாரோ இவன் யாரோ – மெய்யழகன்)
சிறந்த பின்னணி பாடகர் – ஹரிச்சரண் (ஹே மின்னலே – அமரன்)
சிறந்த பின்னணி பாடகி – ஸ்வேதா மோகன் (ஹே மின்னலே – அமரன்)
சிறந்த அறிமுக இயக்குநர் – சுரேஷ் மாரி (ஜே பேபி), தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)
சிறந்த அறிமுக நடிகர் – ஹிருது ஹாரூன் (தக்ஸ்)
சிறந்த அறிமுக நடிகை – ஸ்ரீகவுரி ப்ரியா (லவ்வர்)
சிறந்த ஒளிப்பதிவு – சி. எச். சாய் (அமரன்)
தலைசிறந்த நடிப்பு – விக்ரம் (தங்கலான்)
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan