நிலவை நோக்கி மீண்டும் ஒரு வரலாற்றுப் பயணம் - ஆர்ட்டெமிஸ்
23 மாசி 2026 திங்கள் 08:16 | பார்வைகள் : 147
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்முறையாக மனிதர்களை நிலவுக்கு அருகில் அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலத்தை மார்ச் மாத தொடக்கத்தில் ஏவ நாசா (NASA) திட்டமிட்டுள்ளது.
இது மனிதகுலம் விண்வெளியில் மேற்கொள்ளும் மிக நீண்ட தூரப் பயணமாக அமையும். சமீபத்தில் நடத்தப்பட்ட "வெட் டிரெஸ் ரிஹர்சல்" எனப்படும் எரிபொருள் நிரப்புதல் மற்றும் கவுண்டவுன் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
முன்னதாக பெப்ரவரி தொடக்கத்தில் நடந்த சோதனையில் ஹைட்ரஜன் கசிவு ஏற்பட்டதால், அது சரிசெய்யப்பட்டு தற்போது ரொக்கெட் ஏவுதலுக்குத் தயாராக உள்ளது.
"ஒவ்வொரு இரவும் நான் நிலவைப் பார்க்கும்போது உற்சாகமடைகிறேன். அவள் (நிலவு) நம்மை அழைக்கிறாள், நாமும் தயாராக இருக்கிறோம்," என்று நாசாவின் லோரி கிளேஸ் (Lori Glaze) தெரிவித்துள்ளார்.
விண்வெளி வீரர்கள் 98 மீட்டர் உயரமுள்ள SLS (Space Launch System) என்ற பிரம்மாண்ட ரொக்கெட்டில் பயணிக்க உள்ளனர். இதன் உச்சியில் உள்ள ஓரியன் (Orion) என்ற சிறிய காப்ஸ்யூலில் அவர்கள் தங்குவார்கள்.
நிலவின் மேற்பரப்பிலிருந்து சுமார் 6,500 - 9,500 கி.மீ உயரத்தில் பறந்து ஆய்வு செய்வார்கள். நிலவைச் சுற்றிய பிறகு மீண்டும் 4 நாட்கள் பயணம் செய்து பசிபிக் பெருங்கடலில் விண்கலம் வந்து இறங்கும்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், அடுத்ததாக ஆர்ட்டெமிஸ் III மூலம் 2028-க்குள் மனிதர்களை நிலவில் தரைையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது.
இதற்காக எலோன் மஸ்க்கின் SpaceX மற்றும் ஜெஃப் பெசோஸின் Blue Origin ஆகிய நிறுவனங்களுடன் நாசா இணைந்து செயல்படுகிறது.
அதே சமயம், சீனாவும் 2030-க்குள் நிலவில் தரைையிறங்கத் திட்டமிட்டுள்ளதால், விண்வெளி ஆய்வில் ஒரு புதிய போட்டி உருவாகியுள்ளது. இரு நாடுகளும் நிலவின் தென் துருவத்தில் தளம் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan