போதைப்பொருள்: MDMA மற்றும் எக்ஸ்டசி பயன்பாடு 480 சதவீதமாக உயர்வு!!
23 மாசி 2026 திங்கள் 08:12 | பார்வைகள் : 387
Observatoire français des drogues et des tendances addictives (OFDT) வெளியிட்ட ஆய்வின் படி, பிரான்சில் MDMA அழைக்கப்படும் எக்ஸ்டசி (ecstasy) என்ற செயற்கை போதைப்பொருளின் பயன்பாடு கடந்த 13 ஆண்டுகளில் 480% அதிகரித்து, 2023ஆம் ஆண்டில் மட்டும் 65.6 மில்லியன் மாத்திரைகளாக உயர்ந்துள்ளது.
2024ஆம் ஆண்டு 9 மில்லியனுக்கும் மேற்பட்ட MDMA மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன (123% உயர்வு), ஆனால் அவற்றில் 75% வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்தவையாகும். ஐரோப்பா உலகளவில் முக்கிய விநியோகஸ்தராக உள்ளது; குறிப்பாக Pays-Bas (நெதர்லாந்து) மற்றும் Belgique (பெல்ஜியம்) ஆகியவை உற்பத்தியின் முக்கிய மையங்களாகும்.
2023ஆம் ஆண்டு MDMA விற்பனை மதிப்பு 312.5 மில்லியன் யூரோக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024ஆம் ஆண்டு பிரான்சில் 53.5 டன் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது (130% உயர்வு). 2023ஆம் ஆண்டு 47 டன் பயன்படுத்தப்பட்டுள்ளது; இதன் சந்தை மதிப்பு 3.1 பில்லியன் யூரோக்களாகும், இது கஞ்சா விற்பனையை விட அதிகம்.
கஞ்சா பறிமுதல் 2024ஆம் ஆண்டு 101 டன்னாக குறைந்துள்ளது (19% குறைவு). ஹெரோயின் பறிமுதல் 2022ஆம் ஆண்டு உச்சமான 1.4 டன்னிலிருந்து 2024ஆம் ஆண்டு 1 டனாக குறைந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan