Paristamil Navigation Paristamil advert login

முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

முதல்வர் ஸ்டாலினுடன் கே.சி.வேணுகோபால் சந்திப்பு: தொகுதி பங்கீடு குறித்து பேச்சு

23 மாசி 2026 திங்கள் 12:01 | பார்வைகள் : 173


முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சி, கூடுதல்  தொகுதி என பேசி வந்தனர். இதனால், இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு குழு அமைத்து நீண்ட நாட்கள் ஆகியும் திமுக பேச்சுவார்த்தையை துவக்கவில்லை என தமிழக காங்கிரஸ்  தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். இதனால் இரு  கட்சிகள் இடையே கூட்டணி நீடிக்குமா என கேள்விகள் எழுந்தது. இச்சூழ்நிலையில்  திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் வேணுகோபால் இன்று சென்னை வந்தார்.  ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு சென்ற அவர், ஸ்டாலின் உடன்  தொகுதி பங்கீடு குறித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்