Paristamil Navigation Paristamil advert login

இயற்கை அனர்த்தம் தொடர்கிறது! - நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு எச்சரிக்கை!!

இயற்கை அனர்த்தம் தொடர்கிறது! - நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு எச்சரிக்கை!!

22 மாசி 2026 ஞாயிறு 09:52 | பார்வைகள் : 333


சீரற்ற வானிலை இன்று பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமையும் தொடர்கிறது. அனர்த்தம் காரணமாக சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிற எசரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

Loire-Atlantique, Maine-et-Loire மற்றும் Charente-Maritime ஆகிய மாவட்டங்கழ்லுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, Morbihan, Ille-et-Vilaine, Sarthe, Vendée, Charente, Gironde, Lot-et-Garonne, மற்றும் Landes ஆகிய எட்டு மாவட்டங்களுக்கும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்கள் உள்ளடங்கலாக மழை, வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு 61 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. செம்மஞ்சள் மற்றும் சிவப்பு எச்சரிக்கை மேற்கு பகுதிகளுக்கே விடப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்