உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியா
22 மாசி 2026 ஞாயிறு 09:08 | பார்வைகள் : 189
ரஷ்யாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன.
எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், உக்ரைன் வழியாக இந்த நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் குழாய்கள் சேதமடைந்து, எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலிலேயே எண்ணெய் குழாய்கள் சேதமடைந்ததாக உக்ரைன் கூறுகிறது. ஆனால், இதனை ஏற்க மறுக்கும் ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும், அரசியல் காரணங்களுக்காக உக்ரைன் திட்டமிட்டே விநியோகத்தைத் தடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றன.
மாற்றுப் பாதைகளில் எண்ணெய்யைக் கொண்டு வர உக்ரைன் முன்மொழிந்தாலும், பழைய வழித்தடத்திலேயே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதில் இந்த இரு நாடுகளும் பிடிவாதமாக உள்ளன.
‘கடனுதவியைத் தடுப்போம்’...: உக்ரைன் இவ்விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்காவிட்டால், அந்நாட்டின் ராணுவ மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக ஐரோப்பிய யூனியன் வழங்கத் திட்டமிட்டுள்ள 9,000 கோடி யூரோ மதிப்பிலான வட்டியில்லா கடனுதவியைத் தடுத்து நிறுத்தப்போவதாக ஹங்கேரி வெளியுறவு அமைச்சா் பீட்டா் சிஜாா்டோ அறிவித்துள்ளாா்.
‘மின்சாரத்தை நிறுத்துவோம்’...: இதே விவகாரத்தில் ஸ்லோவாகிய பிரதமா் ராபா்ட் ஃபிகோவும் உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
வரும் திங்கள்கிழமைக்குள் ரஷிய எண்ணெய் விநியோகம் சீராகாவிட்டால், உக்ரைனுக்குத் தடையின்றி வழங்கப்பட்டு வரும் அவசரகால மின்சாரத்தை உடனடியாக நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளாா்.
உக்ரைனின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் சுமாா் 18 சதவீதத்தை ஸ்லோவாகியா வழங்கி வருகிறது. ஏற்கெனவே, போரினால் மின்சாரக் கட்டமைப்பு சிதைந்துள்ள நிலையில், ஸ்லோவாகியாவின் இம்முடிவு உக்ரைனுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan