பாகிஸ்தானில், 24 மணித்தியாலத்தில் இரண்டு முறை நிலநடுக்கம்
22 மாசி 2026 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 841
பாகிஸ்தானில், 24 மணித்தியாலத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கு பகுதியில் நேற்று காலை 9:30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
புர்ஹானின் வடகிழக்கில் 14 கி.மீ., ஆழத்தில் மையம் கொண்ட இந்த அதிர்வு, கைபர் பக்துங்வா, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டது.
இதனால் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை.
அதே பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:09 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவான நிலையில், 24 மணி நேரத்திற்குள் மேலும் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan