இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
22 மாசி 2026 ஞாயிறு 08:37 | பார்வைகள் : 233
மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
வடகிழக்கில் முதன்முறையாக குவஹாத்தியில் நடந்த 87வது சிஆர்பிஎப் தின அணிவகுப்பில் பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது. மணிப்பூரில் இன வன்முறையைக் கையாளவும், நக்சலைட்டுகளின் முதுகெலும்பை உடைக்கவும் பாதுகாப்பு படை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்று ஆண்டுகளில் சிஆர்பிஎப் முக்கிய பங்கு வகித்துள்ளது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலைட்டுகள் இல்லாத நாடாக மாறும். நாட்டிலிருந்து நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும். இதனை நான் சிஆர்பிஎப் வீரர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையில் கூறுகிறேன்.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் உள்ள கர்ரெகுடா மலைகளில் 21 நாள் ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையில் நக்சலைட்டுகள் 31 பேர் கொல்லப்பட்டனர். 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், தினமும் 15 லிட்டர் தண்ணீர் வியர்வையில் வீணாகும்போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், நக்சலைட்டுக்களின் பிடியிலிருந்து மலையை விடுவிப்பதற்காக, அவர்களின் கோட்டையை இடித்துத் தள்ள, துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.
10, 11 ஆண்டுக்கு முன், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி நடந்தது. இப்போது அமைதியான சூழல் உருவாகிவிட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan