பாரிய தாக்குதல் திட்டம்! - உயர்கல்வி மாணவர்கள் இருவர் சுற்றிவளைப்பு!!
21 மாசி 2026 சனி 09:15 | பார்வைகள் : 3586
வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகளில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட இரு உயர்கல்வி மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் (PNAT) பிரான்சின் வடக்குப்பகுதி ஒன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 16 வயதுடைய இரு உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள பொதுமக்கள் கூடும் வணிக தளங்களில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். அவர்கள் தாக்குதலுக்கு திட்டமிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் இசை நிகழ்ச்சி அரங்கும் ஒன்றாகும்.
கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இருவரும் சுற்றி வளைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதோடு, அவர்களது வீடுகளும் சோதனையிடப்பட்டது.
அத்தோடு அவர்கள், டெலிகிராம் செயலி ஊடாக இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளோடு தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire