Paristamil Navigation Paristamil advert login

ஈரானில் வாழும் போலந்து பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 ஈரானில் வாழும் போலந்து பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

20 மாசி 2026 வெள்ளி 06:40 | பார்வைகள் : 305


ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை முன்னிட்டு, போலந்து அரசு தனது குடிமக்களை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அவசரமாக கேட்டுக்கொண்டுள்ளது.

போலந்து குடிமக்களுக்கு வெளியேற சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கக்கூடும்” என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் எச்சரித்துள்ளார்.

கடந்த கோடைகாலம் முதல் ஈரான் தனது அணு மற்றும் ஏவுகணை தளங்களைப் பழுது பார்த்து பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

மேலும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களிலும் கடந்த ஒரு மாதமாக முன்னெச்சரிக்கை தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்–ரஷ்யா இணைந்த கடற்படை பயிற்சியும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஓமான் வளைகுடாவில் நீடித்துவரும் கடற்படை பயிற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இணைந்த நடவடிக்கை இடம்பெற்றது.

ஈரான் அரசுத் தொலைக்காட்சி, ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களில் சிறப்பு படையணி வீரர்கள் பணியில் ஈடுபட்ட காட்சிகளை வெளியிட்டது.

ஈரானில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றம் காரணமாக, பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.அவற்றில் போலந்தும் இணைந்துள்ளது.

அதேவேளை, ஈரானில் பரவலாக நடந்த போராட்டங்களை அதிகாரிகள் கடுமையாக அடக்க முயன்றதாலும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் இத்தகைய பதற்ற சூழ்நிலையில், நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது. 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்