மக்களின் நம்பிக்கையை காக்கும் என உறுதி: பிரேமலதா விஜயகாந்த்
20 மாசி 2026 வெள்ளி 11:35 | பார்வைகள் : 839
யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;“கூட்டணி அறிவித்த இந்த நன்னாளில், வெற்றிப் பயணத்தின் தொடக்கமாக நான் கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினேன்.
இது வெறும் அரசியல் முடிவு அல்ல… மக்களின் நம்பிக்கையை காக்கும் என் உறுதி. கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன், மக்களின் ஆதரவுடன், நிச்சயம் நாம் வெல்வோம்.”இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan