Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவின் சுரங்கத்தில் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் பலி

 நைஜீரியாவின்  சுரங்கத்தில் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் பலி

19 மாசி 2026 வியாழன் 07:44 | பார்வைகள் : 173


நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனர்.

மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு பரவியதாகக் கூறப்படுகிறது.

இத்துயர சம்பவத்தில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மேலும் 25 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன.  

வர்த்தக‌ விளம்பரங்கள்