நீரழிவு நோய் ஏற்படுவதற்காக காரணங்கள் தெரியுமா?
18 மாசி 2026 புதன் 16:08 | பார்வைகள் : 2706
இவ்வளவு நாட்களாக சர்க்கரை நோய் வருவதற்கு உணவுமுறையும், மரபணுவுமே காரணம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் இவற்றுடன் சேர்த்து இன்னும் இரண்டு விஷயங்களும் நீரிழிவுக்கு காரணமாக இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவை என்ன, எப்படி அவை நீரிழிவுக்கு காரணமாகிறது என்பது பற்றிதான் இங்கே பார்க்கப் போகிறோம்.
சமீபத்திய ஆய்வுகளின்படி ‘மன அழுத்தம் மற்றும் தூக்கத்தில் ஏற்படும் தொந்தரவுகள்’ ஆகியவை, உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலினை கையாளுவதற்கு எதிராக தீவிரமாக செயல்படுகின்றன என்பது தெரியவந்துள்ளது. இவை இரண்டும் எப்படி நிகழ்கிறது என்பது பற்றிய தகவல்கள், இங்கே:
மன அழுத்தத்துக்கும் ரத்த சர்க்கரை அளவுக்கும் என்ன தொடர்பு? மன அழுத்தம் காரணமாக உடல் ஒரு அச்சுறுத்தலை உணரும்போது ஹைபோதாலமிக், பிட்யூட்டரி, அட்ரீனல் (HPA) சுரப்பிகள், நரம்பு மண்டலம் ஆகியவை ஆக்டிவ் ஆகின்றன. இவையாவும் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகின்றன. இந்த ஹார்மோன்கள் விரைவாக ஆற்றலை வழங்குவதற்காக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இது நாள்படும்போது, இன்சுலின் உணர்திறன் குறைந்து சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
தூக்கத்துக்கும் ரத்த சர்க்கரை அளவுக்கும் என்ன தொடர்பு? தூக்கக் கட்டுப்பாடு, தொந்தரவு மிக்க தூக்கம் மற்றும் ஒழுங்கற்ற தூக்க நேரம் ஆகியவை குளுக்கோஸ் சகிப்புத்தன்மையையும், இன்சுலின் உணர்திறனை குறைக்கும் வேலையையும் செய்கின்றன. இது நாள்படும் போது HbA1c அதிகரிப்பதும், டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.
இதுவே நல்ல தூக்கம் கிடைத்து, மன அழுத்தம் இன்றி வாழ்பவர்களுக்கு உடலில் இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் கட்டுப்பாடுகளில் பெரும் மாற்றங்கள் தெரிவது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் கருத்தில் கொண்டு நீரிழிவு நோயாளிகள் என்னதான் உணவு மற்றும் மருந்துகள் உட்கொண்டாலும், தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மையும் இருந்தால் நிச்சயம் நல்ல பலன்களை காணலாம் என பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan