மீண்டும் பிரான்சை சூழும் ஆபத்து!!
18 மாசி 2026 புதன் 13:18 | பார்வைகள் : 4082
Nils புயலின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், புதிய புயல் ஒன்று பிரான்சை தாக்க உள்ளது.
140 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும், 60 மி.மீ மழை கொட்டித்தீர்க்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. "tempête Pedro" என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று புதன்கிழமை மாலை நாட்டின் தென்மேற்கு வழியாக நுழைய உள்ளது. பின்னர் அரு வடமேற்கு பகுதிவழியாக கரை கடக்க உள்ளது. இதன்போது சில இடங்களில் 90 மி.மீ வரையான மழையும், பல பகுதிகளில் 40 தொடக்கம் 60 மில்லிமீற்றர் வரையான மழையும் கொட்டித்தீர்க்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
அதேவேளை, 120 தொடக்கம் 140 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த பெட்ரோ புயலை பொறுத்தவரை காற்றின் தாக்கத்தை விட, மிக அடர்த்தியான மழையை கொட்டித்தீர்க்கும் எனவும் Météo France அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire