Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய தாக்குதலில் ஆதிக்கம் செலுத்திய நிசங்கா! சிலாகித்து கூறிய குமார் சங்ககாரா

அவுஸ்திரேலிய தாக்குதலில் ஆதிக்கம் செலுத்திய நிசங்கா! சிலாகித்து கூறிய குமார் சங்ககாரா

18 மாசி 2026 புதன் 08:43 | பார்வைகள் : 864


அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடிய நிசங்காவை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா பாராட்டினார்.

இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தனது சூப்பர் 8 சுற்றினை உறுதி செய்தது.

இப்போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் காயமடைந்து பாதியில் வெளியேறினார்.

ஆனாலும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி அவுஸ்திரேலியாவின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்கா (Pathum Nissanka) சிக்ஸர்மழை பொழிந்து சதம் விளாசினார்.  

இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்ககாரா (Kumar Sangakkara) வெற்றியை நிலைநாட்ட உதவியாய் இருந்த வீரர்களை பாராட்டியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இலங்கை அணியில் முக்கிய வீரர்கள் காயமடைந்தாலும் முன்னேறி வெற்றியை உறுதி செய்தது. அவுஸ்திரேலிய தாக்குதலில் பதும் நிசங்கா தனது ஹேமரை கொண்டு ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தியதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.