Air France ஆசியாவிற்கான விமானங்களை பாதியாகக் குறைப்பதாக எச்சரிக்கை!!
18 மாசி 2026 புதன் 08:05 | பார்வைகள் : 2623
Air France, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுத்தமான விமான எரிபொருள் (SAF) பயன்பாட்டு கட்டாய இலக்குகள் காரணமாக, ஆசியாவுக்கு தனது விமான சேவைகளில் பாதியை குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது.
SAF எரிபொருள் பாரம்பரிய கெரோசினை (le kérosène) விட மூன்று மடங்கு அதிக விலையுடையது. European Union 2025 முதல் 2050 வரை SAF பயன்பாட்டை 2% இலிருந்து 70% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஆனால் உற்பத்தி பற்றாக்குறை மற்றும் மானியங்களின் இல்லாமை காரணமாக, குறிப்பாக ஐரோப்பாவில் SAF மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது.
European Union Aviation Safety Agency தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு SAF ஒரு டன்னுக்கு 2,085 யூரோக்களாக இருந்தது; இதேவேளை கெரோசின் 734 யூரோக்கள் மட்டுமே. இதனால் நீண்ட தூரப் பயணங்கள், குறிப்பாக ஆசியா நோக்கிய சேவைகள், இலாபகரமற்றதாக மாறும் அபாயம் உள்ளது.
இதற்கிடையில், Emirates, Qatar Airways மற்றும் Turkish Airlines போன்ற ஐரோப்பிய அல்லாத விமான நிறுவனங்கள் இந்த விதிமுறைகளுக்கு உட்படாததால், குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கி சந்தைப் பங்கினை அதிகரித்து வருகின்றன. இதனால் ஐரோப்பிய விமானத் துறையின் போட்டித்திறன் கடுமையாக பாதிக்கப்படலாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan