ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ் சினிமா
17 மாசி 2026 செவ்வாய் 16:11 | பார்வைகள் : 1781
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் புறநானூறு. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் வெளியானது. அடுத்து சிவகார்த்திகேயனின் 26வது படமாக சேயோன் என்ற பெயரில் இன்று புதிய படத்திற்கான அப்டேட் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தை தாய்கிழவி படத்தின் இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். அமரன் கூட்டணிக்கு பிறகு இந்தப் படத்தை மீண்டும் ராஜ்கமல் நிறூவனம்தான் தயாரிக்கிறது. தாய்க்கிழவி படத்தை பொறுத்தவரைக்கும் வரும் 27ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. ஒரு வேளை தாய்க்கிழவி படம் மட்டும் வெற்றியடைந்துவிட்டால் சிவகார்த்திகேயனின் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடன் பின்னணியில் மயில் தோகை சூழ மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார். படத்தின் தலைப்பை பொறுத்தவரைக்கும் இது தமிழில் தமிழ் கடவுளான முருகனை குறிக்கும் பெயராகும்.
மதுரை பின்னணியில் உருவாகும் ஒரு கிராமத்து ஆக்ஷன் படமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சேயோன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே கோலிவுட்டில் சமீபகாலமாக ஆன்மீக படத்திற்கான மவுசு அதிகமாகிவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதாவது சூர்யாவும் கருப்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ஆன்மீகத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படமாகத்தான் வரப்போகிறது. இன்னொரு பக்கம் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படமும் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. கருப்பு , மூக்குத்தி அம்மன் 2, சேயோன் போன்ற படங்களின் போஸ்டரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan