முகத்தை ஜொலிக்க வைக்கும் கிரீன் டீ
28 ஆடி 2017 வெள்ளி 11:59 | பார்வைகள் : 15512
கிரீன் டீ உடல் எடை குறைக்க, இளமையாக இருக்க தினமும் குடிக்க வேண்டும் என எல்லாரும் சொல்ல கேட்டிருப்பீர்கள். ஆனால் இது சருமத்திற்கும் பொலிவை தரக் கூடியது.
மிருதுவான கிளியரான சருமம் யாருக்குதான் பிடிக்காது. அப்படி அழகான சருமம் கிடைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? தினமும் வெறும் 10 நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் சருமத்திற்கு எந்த வித பாதிப்பிலாமல் இளமையாக காப்பாற்றிடலாம்.
முதலில் உங்கள் சருமத்திலுள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் களைய வேண்டும். அதற்கு ஸ்க்ரப் உபயோகித்திடுங்கள். இவை இரண்டும் உங்கள் சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. மிக முக்கியமான விஷயம் இயற்கையான ஸ்க்ரப், மாய்ரைஸரே உங்கள் சருமத்திற்கு எந்த வித கேடையும் தராது.
அப்படி உங்கள் சருமத்தை அழகுபடுத்தும் குறிப்புதான் இது. வீட்டிலேயே இந்த ஸ்க்ரப்பை செய்து அதன் பயனை முழுவதும் பெறுங்கள்.
தேவையான பொருட்கள் :
கிரீன் டீ பேக் - 2
தேன் - 1 டீ ஸ்பூன்
கிரீன் டீ பேக்கை வெதுவெதுப்பான நீரில் 1 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் டீ பேக்கிலிருந்து டீத்தூளை பிரித்தெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தேயுங்கள். நன்றாக மேல் நோக்கி மசாஜ் செய்தவாறு தேய்க்க வேண்டும்.
பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் மெல்லிய துணியால் முகத்தை ஒத்தி எடுத்து, ரோஸ் வாட்டரை முகத்தில் தடவுங்கள்.
இவ்வாறு தினமும் செய்தால் மாசின்றி உங்கள் முகம் ஜொலிக்கும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan