கடைகளில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தும் வசதி!!
16 மாசி 2026 திங்கள் 20:03 | பார்வைகள் : 3510
பாராளுமன்றம், கடைகளில் அல்கோரித (algorithmiques) கண்காணிப்பு கேமராக்களை 2027 இறுதி வரை சோதனை அடிப்படையில் பயன்படுத்த அனுமதிக்கும் சட்ட முன்மொழிவை முதல் வாசிப்பில் நிறைவேற்றியுள்ளது.
திருட்டுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம். இடதுசாரிகள் இதை “மிகவும் கவலைக்கிடமான விலகல்” என்று விமர்சித்துள்ளனர். 60 ஆதரவுகள் மற்றும் 13 எதிர்ப்புகளுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. Renaissance, LR, Horizons மற்றும் Rassemblement national ஆதரவு தெரிவித்தன; MoDem வாக்களிப்பில் இருந்து விலகியது. இது தற்போது செனட் சபையில் ஒப்புதலை பெற வேண்டும்.
Renaissance கட்சியின் எம்.பி Paul Midy முன்வைத்த இந்த முன்மொழிவு, வீடியோ கண்காணிப்பு காட்சிகளை அல்கோரிதம் மூலம் பகுப்பாய்வு செய்து சந்தேகத்திற்கிடமான நடத்தை கண்டறிந்து வணிகர்களுக்கு எச்சரிக்கை அனுப்ப அனுமதிக்கிறது.
குறிப்பிட்ட நடத்தை (உதாரணமாக, ஒரு பொருளை பையில் வைப்பது) கண்டறியும்படி திட்டமிடப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் கடைக்காரருக்கு எச்சரிக்கை அனுப்பும்; அதன்பின் அவர் தலையிட முடியும். தற்போது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படாத இந்த தொழில்நுட்பம், “2,000 முதல் 3,000 கடைகள்” வரை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று Paul Midy தெரிவித்தார்.
முகஅடையாள அங்கீகாரம் தடைசெய்யப்பட்டதுடன், பொதுமக்களுக்கு தகவல் வழங்கல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது; மேலும், இந்த அல்கோரிதமிக் பகுப்பாய்வு மட்டும், வழக்குத் தொடர அடிப்படையாக இருக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan