இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் 4 புதிய மின்சார SUV-கள்
16 மாசி 2026 திங்கள் 15:16 | பார்வைகள் : 165
இந்தியாவில் மின்சார வாகன சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மார்ச் மாதத்திற்குள் நான்கு புதிய மின்சார SUV-கள் அறிமுகமாக உள்ளன.
இவை டாடா, மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் முக்கிய மாடல்கள் ஆகும்.
1. Tata Punch.ev (Facelift)
2024 ஜனவரியில் அறிமுகமான Punch.ev இப்போது புதிய வடிவமைப்புடன் வருகிறது.
பிப்ரவரி 20 அன்று விற்பனைக்கு வரும் இந்த மாடலில் புதிய முன்புற வடிவமைப்பு, aerodynamics மேம்பாடு, slim light strip கொண்ட பின்புற விளக்குகள் மற்றும் இரண்டு புதிய நிறங்கள் (மஞ்சள், பழுப்பு) வழங்கப்படுகின்றன.
2. Tata Sierra.ev
முழுமையான மின்சார வடிவில் வரும் Sierra.ev, March மாதத்தில் அறிமுகமாகும். இது RWD மற்றும் AWD என இரண்டு வகைகளில் கிடைக்கும். தனித்த rear suspension-உடன், மேம்பட்ட வடிவமைப்புடன் வருகிறது.
3. Maruti e-Vitara:
e-Vitara மாருதி சுசூகியின் முதல் EV மாடல் ஆகும். 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி விருப்பங்களுடன், 440 km மற்றும் 543 km வரை பயணிக்கும் திறன் கொண்டது.
10.25-inch digital cluster, ventilated seats, premium infotainment system போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. விலை அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியாகும்.
4. Toyota Urban Cruiser Ebella
Maruti e-Vitara-வின் மறுவடிவம். Hammerhead Shark design கொண்ட முன்புறம், curvy headlamps, sleek black panel ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இதுவும் பிப்ரவரி இறுதியில் அறிமுகமாகும்.
இந்த SUV-கள் அனைத்தும் ரூ.10 முதல் ரூ.20 லட்சம் விலை வரம்பில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய EV சந்தையில் இவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan