இலங்கையில் நாளை முதல் பலத்த மழை !
16 மாசி 2026 திங்கள் 15:01 | பார்வைகள் : 943
இலங்கைக்கு தென்கிழக்கே மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (தாழமுக்கம்) ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்தக் கடற்பரப்பில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினரை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
எவ்வாறாயினும், இந்தத் தாழமுக்க நிலைமையானது எதிர்வரும் வாரத்தில் ஒரு புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று (16) இரவு வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நாளை (17) முதல் எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan