மீண்டும் விஜயின் கில்லி மங்கத்தா சாதனையை முறியடிக்குமா?
16 மாசி 2026 திங்கள் 14:42 | பார்வைகள் : 1606
தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த கில்லி படம் 2004ம் ஆண்டு வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல். பின்னர், 2024ம் ஆண்டு ரீ ரிலீஸ் ஆகி 30 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிப்ரவரி 20ம் தேதி மீண்டும் கில்லி ரீ ரிலீஸ் ஆகிறது.
ஜனநாயகன் படம் வராத காரணத்தால் கில்லி வருவதாக கூறப்படுகிறது. சூர்யா மூவீஸ் தயாரித்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி 2024ல் ரீ ரிலீஸ் செய்தது. பிப்ரவரி 20ம் தேதியும் அவர்களே வெளியிடுகிறார்கள். கடந்த மாதம் வெளியான அஜித்தின் மங்காத்தா படம் ரீ ரிலீசில் நல்ல வசூலை அள்ளி, தியேட்டர் உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை தந்தது. அந்த படம் 20 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியதாக தகவல். அதை கணக்கில் கொண்டு கில்லியை மீண்டும் வெளியிட உள்ளனர் என்று கூறப்படுகிறது.
2024 ரீ ரிலீசில் கில்லியை பலரும் பார்த்துவிட்டதால் இந்த முறை எப்படி வரவேற்பு இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. விஜயின் சச்சின் படம் ரீ ரீலிசில் ஓரளவு லாபத்தை ஈட்டியது. ஆனால், ப்ரண்ட்ஸ் ஓடவில்லை. மெர்சலும் அப்படியே. மார்ச் மாதம் முதல் தேர்தல் பிரச்சாரம் களை கட்டும், அதை கணக்கில் கொண்டும், தவெகவினர் படம் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடனும் கில்லியை மீண்டும் கொண்டு வருவதாக தகவல்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan