முன்னர் எப்போதும் இல்லாத அளவு - ஜொந்தாமினர் மீதான தாக்குதல்!!
16 மாசி 2026 திங்கள் 13:58 | பார்வைகள் : 1759
ஜொந்தாம் வீரர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல், முந்தைய எந்த ஆண்டுகளிலும் இல்லாத அளவு சென்ற 2025 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதியில் இருந்து ஆண்டு இறுதி வரை “எட்டு” ஜொந்தாமினர் கொல்லப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமான (10,816) ஜொந்தாமினர்கள் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 3,000 ஜொந்தாமினர் நேரடியாக தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒவ்வொரு மூன்று மணிநேரத்துக்கும் ஒரு ஜொந்தாமினர் தாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 16 ஆம் திகதி ஜொந்தாமினருக்கான அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இன்றும் இந்த நிகழ்வு பரிசில் உள்ள Célestins barracks பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெற உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan