இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - 28 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
16 மாசி 2026 திங்கள் 08:57 | பார்வைகள் : 2072
இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 26 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும் மேலும் ஏராளமான மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம், பனிப்பொழிவு, பனிச்சரிவு என பல அனர்த்தங்கள் நாட்டைச் சூழ்ந்து, இயல்பு வாழ்க்கையை கெடுத்துள்ளன. நாட்டின் தென் மேற்கு பகுதியான Gironde மற்றும் Lot மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்விரு மாவட்டங்களையும் சூழ உள்ள 26 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பரிஸ் உட்பட இல்-து-பிரான்சின் மாவட்டங்களுக்கு குறைந்தபட்ச எச்சரிக்கையான ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்தவார வியாழக்கிழமை ஆரம்பித்த Nils புயலின் தாக்கம் இன்று ஐந்தாவது நாளாக தொடர்கிறது. பல இடங்களில் மழை கொட்டித்தீர்த்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொது போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, பனிப்பொழிவும் சில மலைப்பிரதேச மாவட்டங்களில் பனிச்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan