சிரியாவில் ஐ.எஸ். இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
16 மாசி 2026 திங்கள் 07:00 | பார்வைகள் : 189
சிரியாவில் 2024-ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அமைந்துள்ளது.
இது ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில், சிரியாவின் பல்மைரா நகரில் நடந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் எட்கர் பிரையன் டோரஸ், வில்லியம் நதானியேல் ஹோவர்ட் மற்றும் அமெரிக்க குடிமகன் அயாத் மன்சூர் சகாத் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடி வழங்கும் வகையில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்புகளின் நிலைகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளன.
கடந்த 3 ஆம் திகதி முதல் 10 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். நிலைகள் மீது 10 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் அந்த அமைப்புகளின் உட்கட்டமைப்புகள், ஆயுத கிடங்குகள் மற்றும் முகாம்கள் அழிக்கப்பட்டு விட்டன.
தாக்குதல் பல்வேறு வகையான விமானங்கள் மற்றும் ஆளில்லா டிரோன்கள் உதவியுடன் நடத்தப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan