Percy இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: இராணுவ வீரர் படுகாயம்!!
15 மாசி 2026 ஞாயிறு 14:49 | பார்வைகள் : 2543
Hôpital Percy மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு இராணுவ வீரர், தனது சக வீரரால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரமாக காயமடைந்தனதுள்ளார்.
இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாகவும், அது “இன்னும் உறுதியாக நிரூபிக்கப்பட வேண்டிய சூழ்நிலைகளில்” நடந்ததாகவும் État-major de la zone de Défense de Paris தெரிவித்துள்ளது. ஆரம்ப விசாரணைத் தகவல்களின் படி, துப்பாக்கிச்சூடு தற்செயலானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
காயமடைந்த வீரர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்குப் பொறுப்பான வீரர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் விசாரணை நீதித்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Paris நகரின் இராணுவ ஆளுநர் Louis Mizon, விசாரணை தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தி, காயமடைந்த வீரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். Percy இராணுவ மருத்துவமனை, இராணுவத்தினரும் பொதுமக்களும் சிகிச்சை பெறும் ஒரு முக்கிய மருத்துவ மையமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan